திருப்பயணம் – 2019

திருப்பயணம் -2019
https://saintlawrencebasilica.org/

இந்த வருடம் திருப்பயணமாக வடக்கு கரோலினாவில் Ashville-ல் உள்ள St.Lawrence Basilica -க்கு செல்ல முடிவு செய்தோம். July 13,2019 சனிக்கிழமை ஒரு நாள் பயணம் செல்ல திட்டமிட்டோம். இந்த வருட திருப்பணத்தை திரு. லாசர் அவர்கள் ஒருங்கினைத்து வழங்கினார் .இந்த வருடம் ஆறு குடும்பத்தினர்கள் மொத்தம் 21 உறுப்பினர்கள் இந்த திருப்பயணத்தில் கலந்துக் கொண்டனர்.

அவர்களின் விவரங்கள் கீழே

லாசர் – தீபா குடும்பத்தினர்
சதீஸ் – அனித்தா குடும்பத்தினர்
ஜோன்ஸ் – அவிலா குடும்பத்தினர்
அந்தோணி ஆல்வின் – அன்னா குடும்பத்தினர்
லியோ – சினேகா குடும்பத்தினர்
சவேரியார் – ராணி குடும்பத்தினர்

இருபத்து ஒன்று பேரை ஏற்றி செல்ல தகுந்த வாகனம் இல்லாததால், அவரவர்கள் வாகனத்தில் செல்ல முடிவு செய்தொம். அனைவரும் July 13,2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு st. Michael, Cary ஆலயத்தில் கூடினோம். சிறு செபம் செய்து எங்கள் பயணத்தை தொடங்கினோம் . மதிய உணவிற்கு பிற்பகல் 1 மணிக்கு Hickory,NC ல் உள்ள Henry River Park -ல் கூடினோம். அனைவரும் தங்கள் வீட்டிலிருந்தது அறுசுவை உணவை சமைத்து எடுத்து வந்திருந்தார்கள். அங்கு உணவு அருந்திவிட்டு, சிறிது நேரம் இளைப்பாறி விட்டு, அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு park-லிருந்து கிளம்பினோம்.

மாலை 5 மணிக்கு திருப்பலி இருந்தது. திருப்பலிக்கு முன், ஆலயத்தின் முன் உள்ள அன்னை மரியாள் சிலை முன்பு செபமாலை செய்தொம். செபமாலை முடிந்தவுடன் 5 மணி திருப்பலியில் கலந்துக் கொண்டோம்.
திருப்பலி முடிந்தவுடன் ஆலயத்தை Mrs.Carol சுற்றி காட்டினார்கள். இந்த ஆலயத்தின் வரலாறை கீழுள்ள link-ல் கொடுத்துள்ளார்கள்.
https://saintlawrencebasilica.org/the-architect

Tour முடிந்தவுடன் சுமார் 7 மணி அளவில் வீட்டை நோக்கி கிளம்பினோம். இடையில் இரவு உணவை அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பினோம். இது ஒரு நல்ல பக்தி முயற்சியாக அனைவரும் மகிழ்ந்தாரர்கள். இது அனைவருக்கும் மகிழ்சியாக இறைவன் அருளை பெற உதவும் ஒரு பயனமாக இது அமைந்தது.

Spring Social – April 27, 2019

RTP தமிழ் கத்தோலிக்கச் சங்க உறுப்பினர்களின் வருடாந்திர வசந்த சுற்றுலா

படைப்பு : ராஜி ஆதர்ஷ்

RTP தமிழ் கத்தோலிக்கச் சங்க உறுப்பினர்களின் வருடாந்திர வசந்த சுற்றுலா இந்த வருடம் 2019, ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி வெற்றிகரமாக நடந்தது.
இந்த வருடமும் RTP தமிழ் கத்தோலிக்க உறுப்பினர்கள் Crabtree lake, Dogwood shelter இடத்தில் கூடி சந்தித்தோம் . குழுக்கள் அமைத்து, விழாவின் பொறுப்புகள் அனைத்தும் உறுப்பினர்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

தன்னார்வ உறுப்பினர்கள்:
ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு – சதீஷ்
அமைப்பு – விவேக் மற்றும் சதீஷ்
உணவு ஒருங்கிணைப்பு – நிர்மலா, சதீஷ்
ஜோடி விளையாட்டுகள் – விவேக், ஸ்டான்லி
குழந்தைகள் விளையாட்டுகள் – ஜெசிகா, ஹன்னா மற்றும் இளைஞர் குழு

நடத்திய விளையாட்டுக்கள்:
கிரிக்கெட்
பந்து வீச்சு, மட்டை பந்து
ஜோடி : பந்தை எடுத்து நட
கரண்டி -நிலக்கடலை நடை
செய்தித்தாள் ஜோடி விளையாட்டு

காலை 9 மணியளவில் தன்னார்வ உறுப்பினர்கள் சுற்றுலா இடத்தை அடைந்தனர்.9:30 மணியளவில் முன்கூட்டியே வரும் உறுப்பினர்களுக்கு அமைப்பை ஏற்பாடு செய்தனர். உறுப்பினர்கள் ஒருவர் ஒருவராக வர ஆரம்பித்தார்கள். அனைவரும் வரும் வரை மதிய உணவுகள் வரிசையில் வைக்கப்பட்டன.
மட்டை பந்து குதூகலமாக தொடங்கியது, ஆண் உறுப்பினர்கள் மட்டை பந்து ஆட்டத்தில் ஆரவாரித்தனர்.மதியம் 12:30 மணியளவில் மதிய உணவுகள் முதலில் குழந்தைகளுக்கும் , பிறகு பெரியவர்களுக்கும் வழங்கப்பட்டன. பின் உறுப்பினர்கள் பந்து வீச்சு ஆட்டத்தை விளையாட ஆரம்பித்தனர்.

1:30 மணியளவில் பலரது வீட்டு உணவு அறுசுவையாக இருந்தது,அனைத்து உறுப்பினர்களும் உணவு உண்ணத் தொடங்கினார்கள்.

2:00 மணியளவில் சிறுவருகளுக்கான பந்தை எடுத்துநட விளையாட்டு ஆரம்பித்தார்கள். குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக ஆடினர். குழந்தைகள் விளையாட்டுப் பகுதியில் சருக்கு மரம், வளைவுக் கம்பி விளையாடத் தொடங்கினர். ஒரு புறம் சிறுவர்கள் அவர்கள் விரும்பிய ஆட்டத்தை ஆட மறுபுறம் பெரியவர்கள் அவர்களுக்கான விளையாட்டை ஆடத் தொடங்கினர்.

முதல் ஆட்டமாக ஜோடிகள் பந்தை கீழே விழாமல் ஒரு புறம் இருந்து மறுபுறம் சேர்ந்தே கடந்து சென்று ஆடி மகிழ்ந்தனர். பின் செய்தித்தாள் மீது கணவன் மனைவி ஏறி கீழே விழாமல் போட்டியை ஆடினர் , அதில் கால் மட்டும் கீழே இருக்க அவர்களின் அன்பு மேலோங்கி நின்றது. ஆட்ட இடைவேளையில், ஐஸ் கிரீம் கொடுக்கப்பட்டது , சிறுவர்கள் மகிழ்ச்சியில் துள்ளினர்
பெண் உறுப்பினர்கள் கரண்டி -நிலக்கடலை நடை ஆட்டத்தை ஆடி குதூகலித்தனர்.


4:00 மணியளவில் பெண் உறுப்பினர்கள் சுடச்சுட பஜ்ஜி சுடும் ஏற்பாட்டை ஆரம்பித்தார்கள். பெண்கள் இரு குழுக்களாக சமையல் வேளையில் இறங்கினர். முதல் குழு: வித்யா, அவிலா, அனிதா, ஜஸ்டினா, ஹென்னா உருளைக்கிழங்கு, வெங்காயம், வாழைக்காயை அருமையாக வெட்ட, இன்னொரு குழு: ராணி , கோல்டா மசாலாவை பிசைய, சுடச்சுட ஆரம்பமானது பஜ்ஜிக் கடை.
அடுப்புத் தீ பரவாமல் இருக்க தலைவர் சவேரியார் தடுப்பு அட்டை தயார் செய்து வைக்க, பஜ்ஜி சுடும் பணி தொடங்கியது. முழு அணியும் தடுப்புச் சுவராக பிளாஸ்டிக் பையைப் பிடித்து நின்றனர். சுவையான பஜ்ஜி பரிமாறத் தொடங்கப்பட்டது.
சமையலில் பெண்களுக்கு ஆண்கள் சளைத்தவர்கள் இல்லை என நிரூபிக்க ஆண்கள் அணி களம் இறங்கியது. ஆதர்ஷ் மற்றும் ஆரோக்கிய ராஜ் சமையல் பணியை கையில் எடுத்துக்கொண்டனர். ஆண்கள் அணி சதீஷ், அந்தோணி, பால், சவேரியார் தடுப்புச் சுவர்களாக நின்றனர், மட மட வென பஜ்ஜிகள் சுடப்பட்டன.
பஜ்ஜி சுட்டு முடிப்பதற்கு முன் BBQ கிரில் லாசர் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. சுடச்சுட கோழி பர்கரும், காய்கறி பர்கரும் தயாராயின.
மறுபுறம் பூவைச் சுற்றும் வண்ணத்துப் பூச்சிகளாய், குழந்தை ஆதிராவைச் சுற்றி சிறுமிகள் கூட்டம். அரங்கேறியது பாடல், நாடகம், கதை கூறும் போட்டி, யாருக்கும் யாரும் சளைத்தவர் இல்லை என சிறுமிகள் போட்டி போட்டுப் பாட்டுப் பாடினார்கள்.
BBQ கிரில் சிக்கனை ருசிக்க, பெண்கள் ஒரு புறம் பூங்கா உலா முடிக்க , சிறுவர்கள் ஆட்டத்தில் திளைக்க நெருங்கியது கிளம்பும் நேரம். மின்னலாகப் பறந்து வந்த அனைத்து உறுப்பினர்களும் துப்புரவுப் பணிய த் தொடங்கினர். பிரிந்து செல்ல மனம் இல்லாமல் பிரியா விடை கொடுத்து அவரவர் வாகனத்திற்குச் சென்றனர்.
என்ன ஓர் அருமையான தினம்!! அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்த தினம். இந்த நிகழ்வுகள் இறைவனால் கொடுக்கப்பட்டப் பரிசு, இதே ஆனந்த உணர்வோடு எல்லா நிகழ்வுகளிலும் பங்கு கொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். நன்றி.

2018 Christmas Celebration

ஆக்கம் : அந்தோணி ஜெயராஜ்

RTP தமிழ் கத்தோலிக்கச் சங்கத்தின் வருடாந்திர கிறிஸ்துமஸ் பெருவிழா இந்த வருடம் 2018, டிசம்பர் மாதம் 16ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த வருடமும் RTP தமிழ் கத்தோலிக்க சங்கத்தின் பாடகர் குழுவினர், சங்க உறுப்பினர்களின் வீடுகளுக்குச் சென்று கிறிஸ்து பிறப்பு குறித்து பாடல்களைப் பாடி கிறிஸ்து பிறப்பு பெருவிழா மகிழ்ச்சியை அனைவரோடும் பகிர்ந்து கொண்டார்கள்.
சிறு சிறு குழுக்கள் அமைத்து, விழாவின் பொறுப்புகள் அனைத்தும் உறுப்பினர்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் திரு சவேரியார் அவர்களும் திரு ஜெயராஜ் அவர்களும் ஒருங்கிணைத்து தந்தார்கள். குழுக்களின் விவரம்,
உள் மற்றும் வெளி அலங்காரம் – திருமதி. ராணி, திருமதி. தீபா, திரு.ஜோன்ஸ் & திரு. ஆதர்ஷ்;
நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு -திருமதி. வித்யா & செல்வி.ஜெசிக்கா;
திருப்பலி ஒருங்கிணைப்பு – திரு. பவுல்;
ஒலி ஒளி அமைப்பு – திரு. ஜோசப்;
கலை நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கல் – திருமதி. ரூபா;
இரவு உணவு ஏற்பாடு – திரு. சதீஷ் & திரு. கிங்ஸ்லி;
இருக்கைகள் ஏற்பாடு – திரு. ஜெரார்ட் & திருமதி. ஆக்ஸிலியா;
விழாவிற்கு பின் சுத்தம் செய்தல் – அனைத்து உறுப்பினர்கள்.

விழாவானது பிற்பகல் 3 மணி அளவில் ஆடம்பர பாட்டு திருப்பலியுடன் ஆரம்பமானது. திருப்பலியினை தந்தையர்கள் அருட்பணி ஞானப்பிரகாசம் அவர்களும் அருட்பணி பிரவீன் அவர்களும் சிறப்புடன் நடத்தினார்கள். பாடகர் குழுவினர் திருப்பலியில் இனிமையான பாடல்களைப் பாடி பாலன் இயேசுவை போற்றிப் புகழ்ந்தார்கள்.
சிறிய தேநீர் இடைவேளைக்குப் பின்னர் கலை நிகழ்ச்சிகள் சங்கத்தலைவர் திரு லாசர் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது. கலை நிகழ்ச்சிகளை திருமதி ரூபா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளும் அவற்றை வடிவமைத்து வழங்கியவர்களின் பெயர் விபரம் பின்வருமாறு.
குழந்தைகள் நடித்த கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகளின் தொகுப்பு – திருமதி. ராணி & திருமதி. ரூபா.
இளைஞர்கள் இணைந்து பாடிய கிறிஸ்மஸ் பாடல்கள் – திருமதி. நிர்மலா & திருமதி. கோல்டா.
சிறுவர்களின் பியானோ இசை – ரியா & ரெய்லன் கிங்ஸ்லி .
குழந்தைகளின் நடனம் – திருமதி. ராணி & திருமதி. ரூபா.
குழந்தைகளின் கிறிஸ்மஸ் பாடல்கள் – திருமதி. ராணி & திருமதி. ரூபா.
இளைஞர்களின் நடனம் – திருமதி. நிர்மலா & திருமதி. கோல்டா.
பெரியவர்கள் இசையோடு இணைந்து பாடிய கிறிஸ்மஸ் பாடல்கள் – திருமதி.
சூசன் & திரு ஜெரார்ட்.
இளைஞர்கள் இசையோடு இணைந்து பாடிய இசை நிகழ்ச்சி – திருமதி. வித்யா.
ஆடை அலங்கார அணிவகுப்பு – திருமதி. நிர்மலா & திருமதி. ராஜி.
ஆண்களின் இசையோடு இணைந்த குழு பாடல் – திரு. சவேரியார் & திரு. ஜெயராஜ்.
பெண்களின் நடனம் – திருமதி நிர்மலா & திருமதி ராஜி.
இளம்பெண்களின் கதம்ப நடனம் – செல்விகள் ஜெசிக்கா, ஹேனா, சாரா & ஷெரின்.
வேதாகம வினாடி வினா நிகழ்ச்சி – திரு. ஜெயராஜ்.

செயலாளர் திரு சவேரியார் அவர்கள் நன்றி கூற கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவுக்கு வந்தது. அதன் பின் அறுஞ்சுவை விருந்து பரிமாறப்பட்டது. அத்துடன் விழா இனிதாக நிறைவு பெற்றது. இந்த வருட விழாவின் மகிழ்ச்சி தரத்தக்க நிகழ்வு என்னவென்றால் உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழைத்து அனைவரும் எல்லா நிகழ்வுகளிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு கலந்து கொண்டார்கள். அருள் தந்தை பிரவீன் அவர்கள் தன் உரையில், அவர் வீட்டையும், நாட்டையும் பிரிந்து வாடியதாகவும், இந்த கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம் அவர் தன் சொந்த மண்ணுக்கு சென்ற மகிழ்ச்சியைக் கொடுத்ததாகவும் கூறினார். இது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. இந்த நிகழ்வுகள் இறைவனால் உந்தப்பட்ட நிகழ்வுகளாகவே நாம் எடுத்துக்கொள்ள முடியும். இதே அர்ப்பணிப்பு உணர்வோடு எல்லா நிகழ்வுகளிலும் பங்கு கொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்

Christmas Carols 2017

During Christmas season, every year, the RTP Tamil Catholic Choir brings the Christmas cheer to every member’s house. In 2017, they visited the houses of around 15 members in Cary, Apex, Morrisville, Raleigh, Clayton, Durham, Chapel Hill and Martinsville in Virginia.

The choir also brought cheer to the parishioners of St. Joseph’s Church in Eden. The following is a video recording of some of the songs they sang. Enjoy!

 

Christmas Celebration 2017

Christmas Celebration 2017

Text by Savariar. Photos by Joseph.

RTP தமிழ் கத்தோலிக்கச் சங்கத்தின் சார்பாக, 2017 கிறிஸ்து பிறப்பு நாள் மிக விமரிசையாக கொண்டாடப்  பட்டது. இந்த வருடம் கிறிஸ்து பிறப்பு  விழாவை  வழக்கம் போல, கிறிஸ்துமஸ் carol-யுடன்  ஆரம்பித்தோம். carol-க்கு எத்தனை  குடும்பங்கள் விருப்பமாக உள்ளனர் என்று அறிய, google-form  மூலமாக கணக்கெடுத்தோம். திரு. ஜோசப் அவர்கள் google form-ஐ வடிவமைத்துக்  கொடுத்தார்கள். இந்த முறை 24 குடும்பங்கள் carol team-ஐ  தங்கள் வீடுகளுக்கு வர விருப்பம் தெரிவித்திருந்தனர். அதனால் நான்கு நாள்கள் carol செய்வதாக முடிவெடுத்தோம். இந்த வருடம் திருவருகைக் காலம் டிசம்பர் 3-ம் தேதி தொடங்கியது, எனவே carol-ஐ  டிசம்பர் 7,2017 வியாழன் தொடங்கி  டிசம்பர் 10,2017 ஞாயிறு வரை செய்ய முடிவெடுத்தோம். திருமதி. Golda அவர்களும், திரு. குமார் அவர்களும் carol பாடல்களை தேர்ந்தெடுத்தார்கள், பல்வேறு வேலைகளுக்கிடையிலும் carol பயிற்சி எடுத்தோம். எல்லா வீடுகளிலும் எங்களை சிறப்பாக வரவேற்றார்கள். இந்த வருட carol உறுப்பினர்கள் திரு.சவேரியார், திரு.அந்தோணி, திரு.வின்சென்ட் குமார், திருமதி. கோல்டா மெர்லின், திருமதி. தீபா, திருமதி. லூர்து ஜெயராணி.

 

டிசம்பர் 17,2017 ஞாயிறுக் கிழமை கிறிஸ்து பிறப்பு திருவிழா . இந்த வருட நிகழ்ச்சிகளை நடத்தும் பொறுப்பு திரு.அந்தோணி அவர்களிடம் கொடுக்கப்பட்டது.  காலை 9 மணிக்கு Cary -யில் உள்ள Twin Lake Clubhouseஅலங்கரிக்க தொடங்கினோம். திரு.சவேரியார், திரு.லாசர், திரு.அந்தோணி, திரு.ஜோசப், திரு.அஜி, திரு.ஆதர்ஷ், திரு. குமார், திரு.விவேக் குடும்பத்தினர் வந்து அலங்கரித்தனர். லாசர்-தீபா குடும்பத்தினர் அலங்கார குழுவிற்கு தேநீரும், சிற்றுண்டியும் தந்து தெம்பூட்டினர். மாலை 3:30 மணிக்கு செபமாலையுடன் திருவிழா ஆரம்பித்தது. இந்த வருட திருப்பலியை அருள்திரு. ஞானபிரகாசம் அடிகளாரும், அருள்திரு. லூர்துராஜ் அடிகளாரும் இனைந்து நிறைவேற்றினார்கள். டேவிட், கிறிஸ், ரானன் பூசை உதவி புரிந்தனர். அருள்திரு லூர்துராஜ் அடிகளார்  ஆங்கிலத்திலும், அருள்திரு. ஞானபிரகாசம் அடிகளார்  தமிழிலும் மறையுரை ஆற்றினார்கள். மக்கள் அனைவரும் திருப்பலியில் நன்கு பங்கேற்றார்கள். பாடல் குழுவினர் பாடல்களை சிறப்பாக பாடினார்கள். திருப்பலி சுமார் 5:00 மணிக்கு முடிந்தது.  திருப்பலி முடிந்தவுடன் 5:00 மணிக்கு தேநீர்  வழங்கப்பட்டது.

 

தேநீர் இடைவேளைக்குப் பிறகு கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. இந்த வருட நிகழ்ச்சி நிரலை திருமதி.வித்யா அவர்கள் சிறப்பாக வடிவமைத்து கொடுத்தார்கள். எல்லா நிகழ்ச்சிகளும் கூட்டு முயற்சியாகத் தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தோம். இதனால் நிறைய பேர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடிந்தது. கலை நிகச்சிகளை திருமதி. வித்யாவும், திருமதி. கோல்டாவும் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள். Logo போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகளும், பங்குபெற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பெற்றன. முதல் இடத்தை Chris Rozario பெற்றார்.  திரு. ஜோசப் அவர்கள் சிறப்பாக ஒலி-ஒளி அமைத்துக் கொடுத்தார். நிகழ்ச்சி நிரல்களும் அதில் பங்கேற்றவர்களின் விவரங்களும் தனி கோப்பில் கொடுக்கப் பட்டுள்ளது.  

 

திரு. பிரான்சிஸ் அவர்கள் நன்றி கூறியவுடன் உணவு பரிமாறப் பட்டது. இந்த வருடம் திருமதி. ஜூலியட் அவர்களும், திரு. வினோத் ராஜ் அவர்களும் உணவு menu-ஐ சிறப்பாக வடிவமைத்து, உணவகங்களிலிருந்து சரியான நேரத்தில் வரவழைத்து, பரிமாறினார்கள். சுமார் இரவு 10:00 மணிக்கு Clubhouse-ஐ சுத்தம் செய்து முடித்தோம். இது ஒரு மறக்கமுடியாத விழாவாக இனிதே முடிந்தது .

 

Event Agenda – 2017 Christmas Celebration

RTPTCA Logo released

The newly designed logo of the RTP Tamil Catholic Association was released by Rev. Fr. Gnanapragasam on the 19th of November 2017, after the monthly Holy Mass. The logo was received by the Association President Mr. Lazar.

RTPTCA LogoInterpreting our logo

Our logo represents who we are. The globe in the logo in Indian tricolors symbolizes our ancestry and culture and where we came from. The church in US colors symbolizes the community we have built in the USA. Our families are at the center of our church and our faith; we have come together under one roof (the triangle area, where we live) and our religious identity (the cross) binds us together.

The final logo design is based on a logo competition held earlier in the year where many enthusiastic children participated. The winners of the logo competition will win prizes during our Christmas get-together.

A big thank you to all those who contributed into creating the logo.